மீண்டும் ஊரடங்கு ! சுகாதாரத் துறை அமைச்சர் பதில்

Update: 2021-03-27 08:15 GMT

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறும்போது, நிச்சயமாக ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. ஊரடங்கு குறித்து எந்தத் திட்டமும் இல்லை. கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது ஊரடங்கு விதிக்கப்பட்டதற்கு காரணம் இருந்தது. யாருக்கு அந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்று தெரியாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் 21 நாட்களுக்கு மூடினால் வைரஸ் பரவுவது நிறுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஊரடங்கை அறிவித்தோம். ஆனால், வைரஸ் பரவுவது நீங்கவில்லை. எனவே, கொரோனாவுக்கு ஊரடங்கு நிச்சயம் தீர்வல்ல என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News