உள்துறை அமைச்சகம் ஒப்புதல்: இன்று டெல்லி பட்ஜெட் தாக்கல்

உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

Update: 2023-03-22 05:33 GMT

மத்திய அரசுக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பல நாட்களாக இருந்த  பல்வேறு  மோதல்கள் இருந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இன்று (மார்ச் 22) தனது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக நிதியமைச்சர் கைலாஷ் கலோட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

"2023-24 நிதியாண்டுக்கான @அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் பட்ஜெட்டையும், டெல்லியின் நிதி அமைச்சராக எனது முதல் பட்ஜெட்டையும் சமர்ப்பிக்கிறேன். இந்த பட்ஜெட் குடிமக்களின் நலன்களை மேம்படுத்தி, நமது நகரத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது. டெல்லியின் வளர்ச்சிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாளாக நினைவுகூரப்படும்” என்று கெலோட் ட்வீட் செய்துள்ளார்.


டெல்லி எல்ஜி விகே சக்சேனா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் 

2023-24 நிதியாண்டுக்கான டெல்லியின் பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில், உள்கட்டமைப்பு மற்றும் விளம்பரங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எதிர்ப்பு தெரிவித்தது. எனவே  பட்ஜெட்டை நிறுத்தி வைத்து டெல்லி அரசிடம் விளக்கம் கேட்டது.

இதனால்  ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சேபனைகள் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் ஆதாரமற்றது என்று கூறினார், அதே நேரத்தில் பட்ஜெட் விவரங்கள் கசிந்ததாக பாஜக கூறியது.

பின்னர் செவ்வாயன்று, உள்துறை அமைச்சகம் டெல்லி பட்ஜெட்டில் வெளிப்படையான மாற்றங்கள் எதுவும் செய்யாமல் ஒப்புதல் அளித்தது. பட்ஜெட் நடவடிக்கையை நிறுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒப்புதல் கிடைத்துள்ளது .

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு டெல்லி சட்டசபையில் உரையாற்றிய கெஜ்ரிவால், பட்ஜெட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் அவர்கள் அனுமதித்ததாக கூறினார். "நான் தலைவணங்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அது அவர்களின் ஈகோ, வேறு ஒன்றும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தா பட்ஜெட் விவரங்கள் கசிந்ததற்கான சிறப்புரிமையை மீறியதாக தீர்மானம்  கொடுத்தார், அதே நேரத்தில் அவர் நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் சட்டசபையில் இருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டெல்லி அரசின் பட்ஜெட்டை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பும் நடைமுறை அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்று கெஜ்ரிவால் கூறினார்.

இந்த விதி "இரண்டு நிமிடங்கள் கூட" நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்று கூறிய முதல்வர், மத்திய அரசின் ஆட்சேபனை பாரம்பரியத்திற்கு மாறானது . இது முதல் முறையாக நடந்துள்ளது என்றும் கூறினார்

கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை தனது "மூத்த சகோதரர்" என்றும், மத்திய அரசுடன்  இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறினார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்கள் இல்லாதிருந்தால் தேசிய தலைநகர் 10 மடங்கு முன்னேற்றம் கண்டிருக்கும் என்று அவர் கூறினார்.

"டெல்லி அரசாங்கம் வேலை செய்ய விரும்புகிறது, சண்டையிட விரும்பவில்லை. நாங்கள் போராடி சோர்வாக இருக்கிறோம், அது யாருக்கும் பயனளிக்காது. நாங்கள் பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம், நாங்கள் எந்த சண்டையும் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News