வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த ஒடிசா, ஆந்திரா
ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜவாத்' புயல், சனிக்கிழமை மதியம் ஒடிசா-ஆந்திரா கடற்கரையை அடையும் முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா கடற்கரையை ஒட்டி வடக்கு-வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இது மேலும் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் என்று ஐஎம்டி தனது சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே 'குலாப்' மற்றும் 'யாஸ்' புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஓடிசாவிற்கு இது நிச்சயம் ஆறுதலான செய்தி.