யுபிஎஸ்ஆர்டிசி டிக்கெட் இணையதளம் ஹேக்: ரூ. 40 கோடி பிட்காயின் கேட்டு மிரட்டல்

போக்குவரத்து கழகத்தின் ஆன்லைன் டிக்கெட் வெப்சைட்டினை ஓரியன் ப்ரோ நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது.

Update: 2023-04-28 10:45 GMT

பைல் படம்.

உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ (UPSRTC) டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தை சைபர் ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து யுபிஎஸ்ஆர்டிசி அதிகாரி கூறியதாவது:

யுபிஎஸ்ஆர்டிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. "ஹேக்கர் பயணிகளின் தரவை என்க்ரிப்ட் செய்து, இந்தத் தரவை போக்குவரத்துத் துறைக்கு திருப்பி அனுப்புவதற்காக இந்திய நாணய மதிப்பீட்டில் ரூ. 40 கோடி பிட்காயின்களை கொடுக்க வேண்டும் என மிரட்டினர். மேலும் இரண்டு நாட்களில் பணத்தைப் தராவிட்டால், தொகையை இரட்டிப்பாக்குவதாகவும் ஹேக்கர் மிரட்டியுள்ளார்.

"போக்குவரத்து கழகத்தின் ஆன்லைன் டிக்கெட் வெப்சைட்டினை ஓரியன் ப்ரோ நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. கடந்த செவ்வாய்கிழமை ஓரியன் ப்ரோவின் டேட்டா சென்டர் சைபர் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முழு சர்வரின் டேட்டாவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்ஆர்டிசி பொது மேலாளர் (ஐடி) யஜுவேந்திர சிங் கூறியதாவது: ஆன்லைன் டேட்டாவை சேதப்படுத்தியதற்காக ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஆன்லைன் தரவுகளை சேதப்படுத்துதல், தரவுகளை ஹேக் செய்தல், சர்வரில் ஆட்சேபனைக்குரிய பொருள் மற்றும் தகவல்களை அனுப்புதல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அரசு பணிக்கு இடையூறு விளைவித்தல் என ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News