இன்றுடன் ஊரடங்கு நிறைவு – ஜூன் 15 வரை சில கட்டுப்பாடுகள் தொடரும்

பீஹார்-கொரோனா ஊரடங்கு இன்றுடன் முடிவடையுது- ஜூன் 15ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-08 11:06 GMT

பீஹார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 15ம் தேதி வரை சில கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி அன்று ஜூன் 8ம் தேதி வரை நீட்டிப்பதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். ஆனால் பல கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளார்.

தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இருப்பினும் மாநிலம் முழுவதும் ஜூன் 15ம் தேதி வரை சில கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவு முகமை குழுவின் கூட்டத்திற்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமை தாங்கி மாநிலத்தின் கோவிட் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் இது குறித்த முடிவை எடுத்தார். அதன்படி, இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மாலை 4:00 மணி வரை 50% ஊழியர்களுடன் செயல்படவும், கடைகள் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களின் இயக்கத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News