இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.;

Update: 2022-07-12 05:21 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,265 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News