இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு
இன்று நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர் பலியானோர் இறப்பு விகித நிலவரம்-மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் ஒரே நாளில் 2,183 பேருக்கு கொரோனா; 214 பேர் பலி.
இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புதிதாக 2,183 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,44,280 ஆக உயர்ந்தது. புதிதாக 214 பேர் இறந்துள்ளனர்.இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்தது.தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,985 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,10,773 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.