நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-29 06:16 GMT

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கொரனோ பரவல் தலைதூக்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,33,345 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 11,574 பேர் நலமடைந்ததால், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,08,666 ஆனது. தற்போது 99,602 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில், கொரோனா தொற்று காரணமாக 30 பேர் மரணமடைந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 197.46 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,44,788 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு, மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Tags:    

Similar News