இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; நேற்று 31 பேர் பலி

இந்தியாவில் கடந்த 1,549 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2022-03-21 05:30 GMT

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1549 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 761- ஐ விட குறைவாகும்.

இந்தியாவில், கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில், 2 ,652 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News