இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Covid Cases Rise in India - இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

Update: 2022-06-24 04:41 GMT

Covid Cases Rise in India -இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (22-ந் தேதி) 12,249 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 13,313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒருநாள் பாதிப்பு 17,366 ஆக உயர்ந்துள்ளது. இது 24 மணி நேரத்தில் 4,294 அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 88,284 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரு நாளில் 13, 029 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இன்று 13 பேர் உயிரிழந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 5,24,954 ஆக உள்ளது

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News