காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு

விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை.

Update: 2021-04-20 12:17 GMT

காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

" எனக்கு கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தெரிந்தன. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி, பாதுகாப்புடன் இருங்கள்" என்று தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News