இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது, 2,023 பேர் பலி

இந்தியாவில் 20ம் தேதி காலை 7.30 மணி முதல், 21ம் தேதி காலை 7.30 மணி வரை உள்ள 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு புதிதாக தொற்று கண்டிறியப்பட்டுள்ளது. 2,023 பேர் இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரவித்துள்ளது.

Update: 2021-04-21 05:15 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, முதல் அலையை விட, இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பொதுமக்களுக்காக டெலிவிஷனில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்தால் முழு ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,023 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039. தற்போது 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 13,01,19,310 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News