கொரோனா பயமின்றி ஹரித்வாரில் கும்பமேளாவுக்காக குவிந்த பக்தகோடிகள்

Update: 2021-04-12 10:15 GMT




 

கும்பமேளா மிகப்பெரிய மத கூட்டங்களில் ஒன்றாகும் மற்றும் இந்துக்களுக்கான ஒரு முக்கிய யாத்திரையாகும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹரித்வாரில் மகா கும்பமேளாவிற்கு பல கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமனித இடைவெளியை மறந்து கங்கையில் புனித நீராடல் நடைபெற்று வருகிறது. வரும் 30-ஆம் தேதி வரை கும்பமேளா நடக்கும் நிலையில் இன்று, ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு உகந்த நாட்கள் என்று அறியப்படுகிறது.

ஒரே இடத்தில் பக்தர்கள் குவியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்ட அதேநேரத்தில், தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி ஹரித்வாரில் பக்தர்கள் ஒன்று கூடுவதாக கூறி ஆற்றங்கரையில் ஒரு பெரிய கூட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News