இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.;
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178 - ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்ரு ஒரே நாளில், 30,836 பேர் கொரோனாவால் குணமடைந்தனர். அதே நேரம், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,71,363 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொரோனா தொற்று உறுதியாகும் விகிதம் 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.