மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இன்று 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களைப் பொறுத்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். தற்போதைய கட்டுப்பாடுகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்
இது குறித்து பேசிய அவர், இரவு நேர முழு முடக்கம் உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே உணவகங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.