தோனியின் ரீயாக்ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு வைரல்
Mumbai police instagram viral - மும்பை போலீசார் தோனியின் ரீயாக்ஷன் நேரத்துடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது வைரலாகி வருகிறது.;
Mumbai police instagram viral - மும்பை போலீசார் தோனியின் ரீயாக்ஷன் நேரத்துடன் ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது வைரலாகி வருகிறது.
மும்பை போக்குவரத்து போலீசார் தங்களை கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிட்டு ஒரு வேடிக்கையான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை போக்குவரத்து போலீசாரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், மும்பை போக்குவரத்து காவல்துறையின் 'செயல் நேரம்' தோனியின் 'ரீயாக்ஷன் நேரம்' கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்று குறிப்பிட்டுள்ளது.
Mumbai police MS Dhoni
கடந்த செவ்வாயன்று, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியின் பின்னணியில் மும்பை காவல்துறை இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், சிசிடிவியில் பதிவான போக்குவரத்து விதிமீறலின் புகைப்படத்துடன் தோனி ஒரு விக்கெட்டை ஸ்டம்பிங் செய்யும் படத்தை மும்பை காவல்துறை பகிர்ந்துள்ளது. அந்த படத்துடன் போக்குவரத்து போலீசாரின் ‘செயல் நேரம்’ தோனியின் ‘ரீயாக்ஷன் நேரம்’ ஏறக்குறைய ஒரே மாதிரியானது என்று மும்பை காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Mumbai police IPL
மும்பை காவல் துறையின் இந்த பதிவை சுமார் 28,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றிருந்தாலும், கருத்துப் பகிர்வில், காவல்துறையின் அக்கறையின்மை மற்றும் ஊழல் குறித்து பலர் புகார் அளித்துள்ளனர்.
Mumbai Traffic Police is almost the same as ‘reaction time’ of MS Dhoni
மேலும் டுவிட்டர் பயனர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டும் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் நூற்றுக்கணக்கான லைக்குகளை குவிந்ததால், உடனடியாக மும்பை காவல்துறை, குற்றவாளிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
trending news today in tamil, today news in tamil
மும்பை காவல் துறையின் இந்த வேடிக்கையான பதிவு தற்போது இணையத்தில வேகமாக பரவி வருவதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.