வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது

Cylinder Gas Price Today -வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-02 02:35 GMT

வர்த்தக எரிவாயு சிலிண்டர்

Cylinder Gas Price Today -வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறையும், விமான எரிபொருள் விலை 15 நாள்களுக்கு ஒருமுறையும் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. அதன்படி வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.115.5 குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமான எரிபொருள் விலை 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.4,842.37 உயர்ந்து, ரூ.120,362.64-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் விமான எரிபொருள் விலை 4.5 சதவீதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 4.2 சதவீதம் உயர்ந்துள்ளது.  வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,859.50 -இல் இருந்து ரூ.1,744-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்போது வரை வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 7-ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலும் இந்த விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் வர்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.610 வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,053 என்ற விலையிலேயே தொடர்கிறது.

சர்வதேச விலையைவிட வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவாகவே இந்தியாவில் விற்கப்படுவதால், அதன் விலை குறைக்கப்படவில்லை.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News