படிப்பில் மகளுக்கு போட்டி: பள்ளி மாணவனை விஷம் வைத்து கொன்ற பெண்
காரைக்கால் அருகே தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்
காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலமணிகண்டன். இந்த மாணவன் வகுப்பில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியின் தாயார் இதனை ஏற்க முடியாமல், பாலாமணிகண்டனுக்கு விஷம் வைத்து கொன்றதாக காரைக்கால் போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் நேரு காலனியில் வசிக்கும் ராஜேந்திரன் - மாலதி தம்பதியின் மகன்தான் உயிரிழந்த சிறுவன். விக்டோரியா சகாயராணி சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுபாலாமணிகண்டனுக்கு குளிர்பானம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு, சிறுவன் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான், மேலும் விக்டோரியா சகாயராணி தனக்கு குளிர்பானம் கொடுத்ததாக பெற்றோரிடம் கூறினார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கையில் பாலாமணிகண்டனை கொல்ல வேண்டுமென்றே விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. விக்டோரியா சகாயாராணியை காவல்துறையினர் கைது செய்தனர்,
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விக்டோரியாவின் மகளை விட பாலமணிகண்டன் நன்றாக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் அவரது மகள் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.இதற்காக பாலமணிகண்டனை பழி வாங்கும் நோக்குடன் விக்டோரியா பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளியிடம் கொடுத்து கொடுக்க சொல்லியுள்ளார். அப்போது தான் பாலமணிகண்டனின் உறவினர் என்று கூறியதால் காவலாளியும் நம்பி இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே பால மணிகண்டன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.