2020 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது

2020 எழுத்துத் தேர்வு முடிவுகள் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Update: 2021-03-24 04:45 GMT

மத்திய பணியாளர் தேர்வாணையம், 2021 ஜனவரி 8 முதல் 17 வரை நடத்திய குடிமைப் பணிகளுக்கான (முதன்மை) தேர்வின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயலுறவுப் பணி, இந்திய காவல் பணி மற்றும் இதர மத்திய சேவைகளுக்கான (பிரிவு 'ஏ' மற்றும் 'பி') நேர்முகத் தேர்வுக்காக தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானதாகும். அனைத்து விதங்களிலும் தகுதியுடையவராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வயது, கல்வி தகுதி, சமுதாயம், உடல் ஊனம் (இருப்பின்) குறித்த அசல் ஆவணங்களை நேர்முகத் தேர்வின் போது அவர்கள் சமர்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மின்-அழைப்பு கடிதம் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வு தேதி மற்றும் நேரத்தை மாற்றக் கோரும் எந்த கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in மற்றும் https://www.upsconline.in ஆகிய தளங்களை விண்ணப்பதாரர்கள் பார்க்கலாம்.

மின்-அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் ஆணையத்தை கடிதம் மூலமாகவோ அல்லது (011)- 23385271/23381125/23098543 ஆகிய தொலைபேசி எண்களையோ அல்லது 011-23387310, 011-23384472 ஆகிய FAX எண்களையோ அல்லது csm-upsc@nic.in என்னும் மின்னஞ்சல் முகவரியையோ உடனடியாக அணுக வேண்டும்.

Tags:    

Similar News