தற்போது மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு - சீனதேசிய சுகாதார ஆணையம்

பறவைக்காய்ச்சல் பாதிப்பு என்பது பறவைகளுக்குதான் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2021-06-01 14:27 GMT

பறவைக்காய்ச்சல் பாதிப்பு என்பது பறவைகளுக்குதான் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜென் ஜியாங் நகரில் 41 வயது உள்ள நபருக்கு H10N3 வகை வைரஸ் தொற்று மூலம் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனதேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள கிழக்கு ஜியாங்க் மாகாணத்தில் H10N3 வகை பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

H10N3 வகை வைரஸ் பாதிப்புக்குள்ளான 41 வயதுள்ள நபரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோழிகளிடம்இருந்தே இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக சீன தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வைரஸ்கள் தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். கடந்த மே மாதம் 28ஆம் தேதியன்று தொடர்புடைய நபருக்கு இந்த வகை பறவை காய்ச்சல் பாதிப்பை உறுதி செய்ததாக கூறும் சீன தேசிய சுகாதார அமைப்பு இந்த வகை வைரஸ் எப்படி பரவியது என்பதை கூறவில்லை.

மனிதனுக்கு H10N3 வகை வைரஸ் தொற்று பாதிப்பு என்பது உலகில் இதுவரை பதிவாகாத நிலையில் தற்போது முதன்முறையாக ஒருவருக்கு பாதித்துள்ளது உலகின் கவனத்தை மீண்டும் சீனாவின் மீது உற்றுநோக்க வைத்துள்ளது.

Tags:    

Similar News