தமிழ்நாட்டிற்கு ரூ.3878.38 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு அளித்தது

மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் இரண்டு தவணைகளை மத்திய அரசு விடுவித்துள்ளது,;

Update: 2021-11-23 16:40 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் இரண்டு தவணைகளை மத்திய அரசு விடுவித்துள்ளது வழக்கமான மாதாந்திர பகிர்வான ரூ. 47,541 கோடி என்பதற்கு மாறாக ரூ.95,082 கோடி வழங்கப்பட்டுள்ளது

முதலீடு, அடிப்படைக் கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அதிகரிப்பது குறித்து 2021 நவம்பர் 15 அன்று முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதியின் படி மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையான ரூ. 47,541 கோடி என்பதற்கு பதிலாக இரண்டு தவணைகளுக்குரிய ரூ.95,082 கோடியை 2021 நவம்பர் 22 அன்று மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.3878.38 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News