எப்.எம். சேனல்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Covid Vaccine Booster Dose -'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்துவது குறித்து விளம்பரப்படுத்துமாறு, எப்.எம்.,ரேடியோ சேனல்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.;
Covid Vaccine Booster Dose -நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்ட நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து அரசு மையங்களிலும் பூஸ்டர் டோஸ்களை செலுத்த, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ், ஜூலை 15 முதல் வரும் செப். 30 வரை 75 நாள் சிறப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ்களை செலுத்துவது மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து, அனைத்து எப்.எம்., ரேடியோ சேனல்களும் பெரிய அளவில் விளம்பரபடுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2