உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Update: 2021-04-14 02:00 GMT

உலககெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்பர். தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப் பகுதியாகும்.

பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 செக்கன்கள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதன் அடிப்படையிலேயே ஆண்டுக் காலம் கணிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சித்திரையை ஒன்றாக புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.புண்ணிய காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்துநீரை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன் பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் வெகுமதி  பெறுவர்.

மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே வெகுமதி எனப்படுகிறது.பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு, மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும்.

புதிய ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடைபெறும். பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் அதிகரிக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும். வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புதுவருட பலன்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News