ஜம்முவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு
ஜம்முவில் அக்னூர் தாண்டா அருகே பேருந்து சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்;
ஹரியானாவில் குருக்ஷேத்ராவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்முவில் உள்ள அக்னூர் தாண்டா பகுதியில் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து மாவட்டத்தின் கலிதார் பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், பேருந்து சுமார் 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் உருண்டதாக தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்முவில் உள்ள அக்னூர் தாண்டா அருகே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று ஜம்மு மாவட்ட நீதிபதி எக்ஸ்-ல் தெரிவித்தார்.
அந்த வாகனம் ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை ஏற்றிச் சென்றது.
இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ்-ல், "ஜம்முவிற்கு அருகிலுள்ள அக்னூரில் பேருந்து விபத்தில் உயிர் இழந்தது பற்றி அறிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்,
காயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.