வருமானவரி விகிதத்தில் மாற்றமில்லை: வரிவிலக்கு வரம்பு ரூ.2.50 லட்சமே தொடரும்

தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமில்லை. தனி நபர் வரி விலக்கிற்கான உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சம் என்று தொடரும்.;

Update: 2022-02-01 07:00 GMT

  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • அரசின் மூலதன செலவுகளுக்கு ரூ.7. 5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டவிட 35.4% அதிகம்.
  • நாட்டில் 2023, ஆம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும். 
  • மாநிலங்களுக்கு உதவ ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடன்; மூன்று ஆண்டுகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். 
  • திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, தற்போதுள்ள ஓராண்க்கு பதில்,  இரு ஆண்டுகள் என கூடுதல் அவகாசம். 
  • கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% ஆக குறைப்பு
  • அரசின் நிதி  பற்றாக்குறை நடப்பு ஆண்டில் 6.4% ஆக குறையும்.
  • எல்ஐசி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் பி.எப். வரிச்சலுகை.
  • பிட் காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30% வருமான வரி.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மேலும் ஓராண்டுக்கு ஊக்கத்தொகை நீட்டிப்பு. 
  • வரும் ஆண்டில் அரசின் செலவு:  ரூ.39.5 லட்சம் கோடி; வரவு - ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும்.
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி
  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்
  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்
  • நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% அளவில் இருக்கும்
  • வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைப்பு; குடைகள் மீதான வரி 20% உயர்வு
  • மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5%-ஆக குறைக்க முடிவு
  • 2022 ஜனவரி மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகம்
  • பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி (Surcharge) 12-ல் இருந்து 7% ஆக குறைப்பு 
  • தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த  மாற்றமில்லை. தனி நபர் வரி விலக்கிற்கான உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சம் என்று தொடரும். மூத்த குடிமக்களுக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்ற வரம்பு தொடரும்.  இவ்வாறு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 

    நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையை 1.32மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். 
Tags:    

Similar News