குடியரசு தலைவர் தேர்தல்: சோனியா காந்தி, மம்தாவிடம் ஆதரவு கோரிய திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு, சோனியா, மம்தா, சரத் பவார் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு கோரினார்
நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இன்று நாடாளுமன்ற லோக்சபா செயலகத்தில் திரௌபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்பு மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் பேசி ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்யும் அவர் பா.ஜ. கூட்டணி கட்சித் தலைவர்கள் பா.ஜ. மாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.