குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என்று மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல் தெரிவித்தார்

Update: 2021-09-13 01:45 GMT

குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார்.  இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல்கூறுகையில், இன்று  முதல்வர் மட்டுமே பதவியேற்பார். ஓரிரு நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். துணை முதல்வர் பதவி பற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று கூறினார்.

தன்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, ஜே பி நட்டா மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பூபேந்திர படேல் புதிதாக திட்டமிட்டு, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறினார்.

Tags:    

Similar News