பிரதமர் மோடியுடனான நினைவுகளை பகிர்ந்த பியர் கிரில்ஸ்
பிரபல Man vs Wild ஷோவின் ஷுட்டிங்கின் போது பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படத்தை பியர் கிரில்ஸ் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.;
பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பியர் கிரில்ஸ்.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி Man vs Wild. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் காடுகள், பாலைவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளும் சாகசப் பயணம்தான் இந்நிகழ்ச்சியின் சிறப்பு.
2019-ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடியும் பியர் கிரில்ஸுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடியுடனான தனது புகைப்படத்தை பியர் கிரிஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “இந்தியப் பிரதமருடன் மிகவும் ஈரமான மழைக்காடு சாகசத்தின் நினைவு–எனக்கு தெரிந்த இரண்டு விஷயங்கள்: காடுகள் எப்போதும் சிறந்த சம நிலையை உருவாக்குபவை. மேலும், இந்த பயணத்தில் எனது படகு கசிந்து கொண்டிருந்தது” என்பது நிச்சயம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.