அக்டோபர் மாதம் இறுதிவரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் சர்க்கரை ஏற்றுமதிக்கு அக்டோபர் மாதம் இறுதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-02 02:12 GMT

நாட்டில் சர்க்கரை ஏற்றுமதிக்கு  அக்டோபர் மாதம் இறுதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. உள்நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில்கொண்டு, ஏற்றுமதிக்கு தடை விதிக்க கடந்த வாரம் அரசு தீர்மானித்ததாக மத்திய உணவுத்துறை செயலர்  சுஹான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விழாக்காலம் என்பதால், உள்நாட்டின் தேவையை கருத்தில்கொண்டு, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Similar News