குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: முன்னணி நிலவரம்
குஜராத், இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? முன்னணி நிலவரம்
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்களிக்கப்பட்ட நிலையில், இமாச்சலப் பிரதேசம் நவம்பர் 12 அன்று ஒரே கட்டமாக வாக்களித்தது. குஜராத்தில் இரு கட்டங்களிலும் சுமார் 64.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஹிமாச்சல பிரதேசத்தில் 74 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
குஜராத் தேர்தலில் பாஜகவின் ஹர்திக் படேல், ரிவாபா ஜடேஜா முன்னிலை, காந்திதாமில் பாஜகவின் மால்தி மகேஸ்வரி முன்னிலை. கதிர்காம் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா பின்தங்கியுள்ளார்
குஜராத்தில் பாஜக 151 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 21 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலை
135-145 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜகவின் விரும்காம் வேட்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்
குஜராத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக பூர்த்தி செய்துள்ளதாக விராம்காம் சட்டமன்றத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஹர்திக் படேல் வியாழக்கிழமை தெரிவித்தார். பாஜக 135-145 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
குஜராத் அரசியல் களத்தில் பெரும் பிரவேசத்தை எதிர்பார்க்கும் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், குஜராத்தில் இருந்து இரண்டு முக்கிய தலைவர்களான அகமது படேல் மற்றும் மாதவ்சிங் சோலங்கி ஆகியோரை காங்கிரஸ் இழந்தது. குஜராத் காங்கிரஸின் தலைவர்களுக்கு, அகமது படேல் வழிகாட்டியாக இருந்தார். 2017-ல் முன்னணியில் இருந்து வழிநடத்திய ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவில் பிஸியாக இருந்ததால், அந்த இடத்தை நிரப்ப யாரும் இல்லை.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 29 இடங்களில் முன்னிலை பாஜக 30 இடங்களில் முன்னிலை
குஜராத்தில் பாஜக 144 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 27 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலை
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 28 இடங்களில் முன்னிலை பாஜக 26 இடங்களில் முன்னிலை
குஜராத்தில் பாஜக 104 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 44 இடங்களிலும், ஆம் ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலை