ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. படுகாயமடைந்த நிலையில் விமானிகள் மீட்கப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள மர்வா தாலுகாவில் உள்ள மச்னா கிராமத்திற்கு அருகே ராணுவ ஹெலிகாப்டர் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர்.
விமானியும், துணை விமானியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மலை மாவட்டத்தின் மர்வா பகுதியில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹெலிகாப்டர் விபத்தில் விமானிகள் காயமடைந்துள்ளனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
"ஜம்மு & காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே ராணுவத்தின் ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானிகள் காயம் அடைந்துள்ளனர் ஆனால் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன" என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் மாதம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.