அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவின் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Update: 2021-12-09 13:30 GMT

ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே

இந்தியாவில், ராணுவம், கப்பல் படை, விமானப்படை ஆகிய முப்படைகளை ஒருங்கிணைக்கும் விதமாக 'Chief of Defence Staff' என்ற முப்படை தலைமைத்தளபதி என்ற புதிய பதவி, கடந்த 2019ல் ஏற்படுத்தப்பட்டது. இப்பதவிக்கு, அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.

இதனிடையே, குன்னூரில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியாவின் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து டெல்லியில் பாதுகாப்பு வட்டாரங்களை விசாரித்த போது, தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

நரவனே, 2019ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக முகுந்த் நரவனே பொறுப்பேற்றார். பதவி மூப்பு அடிப்படையில் பார்த்தால், இவருக்கே இப்பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரம், இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News