ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ள மேலும் 3 மாதம் கால அவகாசம்

ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ள மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-01-25 16:56 GMT

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தற்போது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குடியுரிமை இல்லாத நபர்களுக்கான (என்ஆர்ஐக்கள்) ஆதார் அட்டை விதிமுறைகள் ஆகும். ஆதார் பதிவு செய்யும் போது NRIகள் குறிப்பிட்ட படிவங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை யுஐடிஏஐ கொண்டு வந்துள்ளது.

இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் NRIகள் ஆதார் பெற விண்ணப்பிக்கலாம். இந்திய பாஸ்போர்ட் இருந்தால், சிறார்களும் பெரியவர்களும், ஆதாருக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள்.

NRI விண்ணப்பதாரர்களுக்கு, செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்று (POI) ஆகும். கூடுதலாக, அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குடியிருப்பாளர்கள் மற்றும் NRI களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயமாகும். அனைத்து NRIகளும் ஆதார் பதிவு செய்யும் போது சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். NRI கள் வழங்கும் இந்தியர்கள் அல்லாத மொபைல் எண்களுக்கு SMS/ஓடிபி அனுப்பப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் மெயில் அவசியம் ஆகும்.

ஆதார் பதிவு/புதுப்பிப்புக்கான படிவங்கள் திருத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் NRI இனி பயன்படுத்த வேண்டும். படிவம் 1: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடியிருப்பாளர்கள் மற்றும் NRIகள் (இந்தியாவில் முகவரிச் சான்றுடன்) ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதற்கு அல்லது புதுப்பிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். படிவம் 2: பதிவு செய்யும் போது அல்லது புதுப்பிக்கும் போது இந்தியாவிற்கு வெளியே முகவரி ஆதாரத்தை வழங்கும் என்ஆர்ஐகளுக்காக இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிவம் 3: 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை (குடியிருப்பாளர்கள் அல்லது NRIகள்) பதிவுசெய்வதற்கு இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

படிவம் 4: இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளைக் கொண்ட NRI குழந்தைகளுக்கு. இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும். படிவம் 5: ஆதார் பதிவு அல்லது புதுப்பிற்காக 5 வயதுக்குட்பட்ட குடியுரிமை அல்லது NRI குழந்தைகளுக்காக (இந்திய முகவரிகளுடன்) இந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும். என்று பல்வேறு புதிய படிவங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். இன்றோடு கால அவகாசம் முடியும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது. ஆதார் முக்கியம்: ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

Tags:    

Similar News