மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு

எப்போதும் இல்லாத வகையில், ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-02-01 06:38 GMT

2013-14ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி மூலதனச் செலவு வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, இந்திய ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது 2013-14ல் செய்யப்பட்ட செலவீனத்தை விட ஒன்பது மடங்கு "எப்போதும் இல்லாத அதிக செலவாகும்" என்று அவர் கூறினார்.

 'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்'

19500 கோடி ரூபாய் செலவில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 5 MMT உற்பத்தி செய்வதே இலக்கு எனவும் கூறினார்

'மருந்து ஆராய்ச்சியில் புதிய திட்டம்'

மருந்துகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம், சிறந்த மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும், மேலும் முன்னுரிமைப் பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும். எதிர்கால மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் உயர்நிலை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான திறமையான மனிதவளத்தை உறுதி செய்வதற்காக மருத்துவ சாதனங்களுக்கான பிரத்யேக பல்துறை படிப்புகள் நிறுவனங்களில் ஆதரிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Tags:    

Similar News