அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா
அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார்;
பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக அறிவித்தார் . மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் .
அறிகுறிகள் எவ்வளவு தீவிரமானவை அல்லது மிதமானவை என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
கொரோனா வைரஸால் அமிதாப் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். 2020 இல் அமிதாப் மகன் அபிஷேக் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கு கோவிட் பாசிட்டிவ் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.
சமீபத்தில் தொடங்கிய கோன் பனேகா குரோர்பதியின் 14வது சீசனை அமிதாப் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அமிதாப்பிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.