தாக்குதல் நடத்திய இடத்திற்கு அமித்ஷா செல்கிறார்

Update: 2021-04-05 05:15 GMT

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்திய இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பார்வையிடுகிறார்.மருத்துவமனையில் காயமடைந்த ஜவான்களையும் ஷா சந்திப்பார்.சத்தீஸ்கரின் பிஜாப்பூர் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூரில் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என்று பிஜாப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் கமால் லோசன் காஷ்யப் தெரிவித்தார்.




 இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்திய இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிடுகிறார். பின்னர், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அவர் சந்திக்க உள்ளார்.

Tags:    

Similar News