Ambani donation to ram temple: அயோத்தி ராமர் கோயிலுக்கு அம்பானி ரூ .2.51 கோடி நன்கொடை
Ambani donation to ram temple: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அம்பானி குடும்பம் ரூ .2.51 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.;
Ambani donation to ram temple: அம்பானி குடும்பத்தினர் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ .2.51 கோடி நன்கொடை அறிவித்தனர்.
அயோத்தியின் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த உடனே, அம்பானி குடும்பத்தினர் ராம் பூமி கோயில் அறக்கட்டளைக்கு ரூ .2.51 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டா விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) சிஎம்டி முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகன் ஆகாஷ் மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அம்பானியின் மகள் இஷா அம்பானி, அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கும்பாபிஷேக விழாவுக்குப் பிறகு, முகேஷ் மற்றும் நீதா அம்பானி இந்தியா டுடேயின் செய்தி இயக்குனர் ராகுல் கன்வாலுடன் பேசினர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் இந்தியாவின் புதிய யுகத்தைக் காண்பதில் மிகவும் பாக்கியம் பெற்றதாகக் கூறினார். இதுகுறித்து நீதா அம்பானி கூறுகையில், "உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் இந்தியா, இதுதான் பாரதம்.
பிராண பிரதிஷ்டா விழாவில் கலந்து கொள்ள அயோத்தியை அடைந்தபோது, இஷா அம்பானி ராமர் கோயிலில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், இன்று எங்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். நான் இங்கு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். நீதா அம்பானி, "ஒரு வரலாற்று நாள்" என்றார். முகேஷ் அம்பானி, "கடவுள் ராமர் இன்று வருகிறார், ஜனவரி 22 முழு நாட்டிற்கும் ராம் தீபாவளியாக இருக்கும்." என கூறியிருந்தார்.
அம்பானியைத் தவிர, ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா, ஹீரோ எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் காந்த் முஞ்சால், பாரதி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல், ஜே.எஸ்.டபிள்யூவின் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நிரஞ்சன் ஹிரானந்தனி ஆகியோரும் அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
குமார் மங்கலம் பிர்லா, ராமர் கோயிலின் 'பிராண பிரதிஷ்டா' விழாவை நேரில் பார்த்ததை நம்ப முடியவில்லை என்றும், சுனில் பார்தி மிட்டல், இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், பாரத வர்ஷை உருவாக்க நாட்டு மக்கள் இப்போது உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும்யகூறினர்.
ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக அயோத்திக்கு வருவேன் எனவும் தெரிவித்தார்.
முக்கிய அரசியல்வாதிகள், முன்னணி தொழிலதிபர்கள், சிறந்த திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், இராஜதந்திரிகள், நீதிபதிகள் மற்றும் உயர் பூசாரிகள் உட்பட 506 ஏ-பட்டியல்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பாளர்கள் பிரமாண்டமான கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அயோத்தி ராம் லல்லா சிலை கும்பாபிஷேகம் நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கோவில்ளில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை எல்இடி திரைகள் மூலம் மக்கள் பார்த்து ரசித்தனர்.
84 விநாடிகள் நடைபெறும் அபிஜீத் முகூர்த்தத்தின் போது பிரதமர் மோடி கோயிலில் தொடர்ச்சியான சடங்குகளை செய்தார்.