அமைச்சர் வீட்டுக்கு தீவைப்பு.. கலவரம்: போலீசார் குவிப்பு amalapuram voilenece
ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டத்தை அம்பேத்கர் மாவட்டமாக மாற்றியதை எதிர்த்து அமைச்சர் விஸ்வரூப் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.;

அமைச்சர் விஸ்வரூப்பின் வீட்டுக்கு பேராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் மாவட்டமாக மாற்ற கடந்த 18ம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. தலித் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த பெயர் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அம்பேத்கர் மாவட்டமாக பெயர் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அமலாபுரத்தில் நடைபெற்ற பேராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அமைச்சர் விஸ்வரூப் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அமைச்சரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

மேலும் அரசு பேருந்துகளுக்கும் தீவைத்ததால் அங்கு நிலை மோசமடைந்தது. இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாபுரத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளை பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் மாற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி பாலராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.