Air Pollution- காற்று மாசுபாட்டை தவிர்க்க, வாகனங்கள் எண்ணிக்கை குறைக்க டாக்டர்கள் பரிந்துரை

Air Pollution-காற்று மாசுபாட்டை குறைக்க, வாகனங்கள் வைத்திருப்பதில் கட்டுப்பாடு விதிக்குமாறு டாக்டர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 02:48 GMT

Air Pollution- டில்லியில் அதிக வாகனங்கள் போக்குவரத்தால், நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. (கோப்பு படம்)

Air Pollution, Number of Vehicles, Doctors Prescription- காற்று மாசுபாட்டை குறைக்க ஒவ்வொரு குடும்பமும் எத்தனை வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டில்லியில் தேசிய நுரையீரல் நோய்கள் மாநாடு 4 நாட்கள் நடைபெற்றது. காற்று மாசுபாடு, அதனால் ஏற்படும் நோய்கள், நுரையீரல் சிகிச்சை துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இடையே மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவரும் நுரையீரல் சிகிச்சை நிபுணருமான டாக்டா் ராகேஷ் கே.சாவ்லா கூறியதாவது,

இந்தியாவில் சுவாசக் கோளாறு பிரச்னைகள் அதிகரிப்பதற்கும் காற்று மாசுபாடு உயா்ந்து வருவதற்கும் தொடா்புள்ளது. உடல்நிலையில் குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்புகளை காற்று மாசுபாடு ஏற்படுத்தும். நாட்டில் கடுமையான ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நுரையீரல் மோசமடைந்த நிலையில் நமது குழந்தைகள் வளா்ந்து வருகின்றனா். இது நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்து இந்தியாவை ஆரோக்கியமற்ற நாடாக்கும்.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக நமது அரசுகள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. காற்று மாசுபாட்டை குறைக்க ஒரு குடும்பம் எத்தனை வாகனங்கள் வைத்திருக்க வேண்டும், ஒரே நேரத்தில் சாலைகளில் எத்தனை வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற கொள்கையை அரசுகள் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் சொந்த காரில் செல்வதைவிடுத்து, ஒரே காரில் பலா் செல்லும் வகையில் காா் பயணங்கள் பகிா்ந்துகொள்ளப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

டில்லியில் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூட தனிநபர்கள் செல்வதற்கு காரை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நீண்ட தூரம் ஒருவர் மட்டுமே பயணிப்பதற்கு, காரை பயன்படுத்தாமல் பஸ், ரயில் அல்லது வசதி இருப்பின் விமானம் போன்ற போக்குவரத்து வசதிகளை  பயன்படுத்த, அவர்கள் முன்வரலாம். பேட்டரி கார்களை பயன்படுத்துவதிலும் சற்று கவனம் செலுத்தலாம். பொதுவாக, கார்களின் பயன்பாட்டை குறைப்பது இயற்கை சூழலை, காற்றை மாசுபடுத்தாமல் இருக்கும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News