குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது-எய்ம்ஸ் மருத்துவமனை

Update: 2021-03-28 01:45 GMT

குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று மதியம் (2021 மார்ச் 27)  மாற்றப்பட்டார்.பரிசோதனைகளுக்கு பின்னர், திட்டமிட்ட பைபாஸ் சிகிச்சையை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினார்கள்.

செவ்வாய் (30 மார்ச்) காலை அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளது, மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.

Tags:    

Similar News