பலே பீகார் திருடர்கள்: டவர், இஞ்சின், சாலையைத் தொடர்ந்து, ஓடும் சரக்கு ரயிலில் ஆயில் திருட்டு
பாட்னாவின் பிஹ்தா பகுதியில் திருடர்கள் ஓடும் சரக்கு ரயிலில் இருந்து எண்ணெயை திருடிச் சென்றனர்.;
பீகாரில் பாலம் மற்றும் ரயில் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் திருடப்பட்டதாகத் தொடர் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் கோபுரங்கள் மற்றும் ரயில்கள் வரை, பீகாரில் திருட முடியாதது என எதுவுமில்லை. இப்போது, நினைத்துப் பார்க்க முடியாத வினோதமான திருட்டுகளுடன் இந்த ஆண்டை நிறைவு செய்ய , திருடர்கள் முடிவு செய்தனர்.
ஒரு ரயில்வே பாலத்தில்.எண்ணெய் டேங்கர்ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் கூடவே தங்கள் வாளிகளை தூக்கிக்கொண்டு எண்ணெய் நிரப்புவதற்காக ஓடும் ஒரு வீடியோ விரலானது.
சரக்கு ரயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) எண்ணெய்க் கிடங்கிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது, அப்போது திருடர்கள் அதன் இலக்கை அடைவதற்குள் எண்ணெயைத் திருடுவதற்காக உள்ளே நுழைந்தனர்.
இச்சம்பவம், தொடர்ச்சியான அசாத்தியமான பொதுச் சொத்துகளை திருடுவது தொடர்கதையாகி விட்டது.
மிக சமீபத்தில் பங்கா மாவட்டத்தில் 2 கிமீ நீளமுள்ள சாலையின் மர்மமான முறையில் காணாமல் போனது. கரோனி கிராமத்தில் வசிப்பவர்கள் ஒரு நாள் விழித்தெழுந்து பார்த்தபோது, அருகிலுள்ள கிராமத்துடன் தங்களை இணைக்கும் ஒரே சாலை தடயமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக புதிதாக விதைக்கப்பட்ட கோதுமை பண்ணை மட்டுமே எஞ்சியிருந்தது.
முன்னதாக, பெகுசராய் என்ற இடத்தில், டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டிருந்த ரயில்வே யார்டுக்குச் செல்லும் வழியில் சுரங்கம் தோண்டிய திருடர்கள் ஒரு ரயில் இன்ஜினை துண்டு துண்டாக வெட்டி திருடிச் சென்றனர்.
பாட்னாவில் உள்ள யார்பூர் ராஜ்புதானா என்ற பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை மொத்தமாக 25 பேர் சேர்ந்து செல்போன் டவரை பிரித்து ட்ரக்கில் ஏற்றி திருடி சென்றுள்ளனர்.
ஏப்ரலில், அமியவர் கிராமத்தில் 45 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலத்தைத் திருடியதற்காக நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த பொறியாளர் உட்பட எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.