மொபைல் டவர், இஞ்சின், இப்ப 2 கிமீ நீள தண்டவாளம்: பலே பீகார் திருடர்கள்

இது முதல் அசாதாரண கொள்ளையல்ல; நவம்பரில் ஒரு ரயில் இஞ்சின், பின்னர் செல்போன் டவர் இப்போது ரயில் தண்டவாளம் திருடப்பட்டுள்ளது

Update: 2023-02-07 03:49 GMT

பீகாரில் திருடப்பட்ட தண்டவாளம்

விதவிதமாக, வித்தியாசமான முறையில்  பொருட்களை திருடுவது என்பது பீகாரில் சகஜம் போலும். பீகாரில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் இன்ஜின் திருடு போனது. மேலும், ஜனவரி 19 ஆம் தேதி அதிகாரிகள் என கூறிக் கொண்டு வந்த மர்ம நபர்கள் செல்போன் கோபுரத்தை திருடி சென்றனர். அதோடு நிற்காமல், பழுது பார்க்க நிறுத்தப்பட்டு இருந்த ரயிலின் பாகங்கள் திருடப்பட்டது. தற்போது தண்டவாளத்தையே திருடி சென்றுள்ளனர்

பீகாரிலுள்ள பன்டோல் ரயில் நிலையம், மதுபாணி பகுதிக்கு இடையே இரண்டு கிலோ மீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளம் களவாடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலையில் திருடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இரண்டு அலுவலர்கள் இந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு ஆணையர் உள்பட் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே வாரியத்தின் அலுவவர் கூறியதாவது: "பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. பாண்டோல் ரயில் நிலையத்தில் இருந்து மதுபாணி அருகே அமைந்திருக்கும் லோகத் சர்க்கரை ஆலை வரையிலான இரண்டு கிலோ மீட்டர் தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. 


இந்த விவகாரத்தில் ஜகான்ஜர்பூர் ரயில்வே போஸ்ட் பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸ், பராமரிப்பு உதவியாளர் முகேஷ் குமார் சிங் என இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது" என்றார்.

இதற்கிடையே இந்த திருட்டு சம்பவம் ரயில்வே உயர் அலுவலர்கள் உதவியுடன் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துறைசார்ந்த விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த நவம்பரில் ரயில் என்ஜின் ஒன்று திருடு போன சம்பவமும் நடந்து உள்ளது. பீகாரில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாத அந்த ரயில் தண்டவாளங்களை திருடியவர்களை தேடும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பீகாரில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் 'இப்படியும் திருடுவார்களா' என்று மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது போன்ற திருட்டு சம்பவங்கள் பீஹார் மாநிலத்தில் மேலும் வேறு ஏதாவது இடத்தில் நடைபெற்று இருக்கிறதா என்பது குறித்தும் அடுத்த கட்ட விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News