புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக COVID-19 தடுப்பூசி இன்று செலுத்திக் கொண்டார் ,இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36.7 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் முதல் டோஸுக்காக 33,65,597 பயனாளிகளுக்கு 51,215 அமர்வுகளில் தடுப்பூசி கள் வழங்கப்பட்டன. 3,05,645 பயனாளிகளுக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் கூறியது இன்று காலை 7 மணி வரை தற்காலிக அறிக்கையின்படி, 6.87 கோடி (6,87,89,138) தடுப்பூசி டோஸ்கள் 11,37,456 அமர்வுகள் மூலம் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.