ஹைட்ரோ மற்றும் சோலார் திட்டங்கள்: பவர் பங்குகள் எழுச்சி
ஹைட்ரோ மற்றும் சோலார் திட்டங்கள் குறித்த அறிவிப்பிற்கு பின் பிறகு அதானி பவர், டாடா பவர் பங்குகள் 3-4% ஏற்றம் கண்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் 2022-23 நிதியாண்டுக்கான நீர் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்ததையடுத்து மின் பங்குகள் வலுப்பெற்றன. டாடா பவர் பங்குகள் 3 சதவீதமும், என்எச்பிசி அரை சதவீதமும், ஜெய்பிரகாஷ் பவர் 1.1 சதவீதமும், என்டிபிசி 1 சதவீதமும் உயர்ந்தன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "123 மெகாவாட் ஹைட்ரோ மற்றும் 27 மெகாவாட் சோலார் திட்டங்களுக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கப்படும்" என்று கூறினார். அதானி கிரீன், டாடா பவர், அதானி பவர், பிஹெச்இஎல், சீமென்ஸ் மற்றும் என்டிபிசி 1-4 சதவீதம் உயர்ந்ததால் பிஎஸ்இ பவர் குறியீடு 1.5 சதவீதம் உயர்ந்தது.