குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசின் 2019ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி காந்த் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்க்கு அறிவிக்கப்பட்டது. டில்லியில் இன்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்.
முன்னதாக நடிகர் ரஜினி காந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் திரை உலகினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நடிகர் ரஜினி காந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.