பஞ்சாபில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டிய துடைப்பம்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.;

Update: 2022-03-10 06:35 GMT

பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த தேர்தலில், ஆளும் காங்கிரஸ் அதிக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 42 சதவிகித வாக்குகளை அள்ளியுள்ளது, ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் 23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் 18% வாக்குகளை பெற்றுள்ள நிலையில் பாஜக வெறும் 6% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்குக் காரணம் மாற்றத்திற்கான குரல்தான். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

டெல்லி மாடல், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சாய்ஸ் ஆம் ஆத்மி கட்சியாக இருந்தது. முதல்வர் முகமாக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டதும் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாப்பிலும் தற்போது வெற்றிக்கொடி நாட்டியுள்ளது ஆம் ஆத்மி கட்சி

Tags:    

Similar News