பிப்ரவரி 1 முதல் தேசிய பென்சன் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம்

பிப்ரவரி 1 முதல் தேசிய பென்சன் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-19 15:20 GMT

தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது.. பென்சன் திட்டத்தில் பணத்தை எடுப்பதற்கான புதிய விதிமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) தனியார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது ஆகும். இத்திட்டப்படி மக்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலத்திலேயே, ஓய்வூதியம் பெறுவதற்காக முதலீடு செய்ய முடியும். இந்த பணத்தை தேசிய பென்சன் திட்டப் பங்குகள், அரசுப் பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் அரசு முதலீடு செய்கிறது. அதன் மூலம் வருவதை ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு, பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள், மீதமுள்ள தொகையை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார்கள். பிரிவு 80C மற்றும் பிரிவு 80CCD ஆகியவற்றின் கீழ் வருமான வரிச்சலுகையும் இத்திட்டத்தில் உண்டு.

இந்நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓய்வூதியம் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி, இனி தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது. இந்தத் தொகையில் பணியாளர் மற்றும் முதலாளி (நிறுவனம்) ஆகிய இருவரின் பணமும் உள்ளடக்கியதாகும். முதலீட்டுக் காலத்தில் மூன்று முறை மட்டுமே கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்த 25 சதவீத தொகையை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேசிய பென்சன் திட்டக் கணக்கிலிருந்து எடுக்க முடியும். ஆனால் இதற்கான நிபந்தனை என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே முதலீடு செய்திருக்க வேண்டும். எதற்கு எல்லாம் தேசிய பென்சன் திட்டத்தில் பணம் எடுக்கலாம். உங்கள் குழந்தைகளின் கல்வி, உங்கள் வீட்டு திருமணம், வீடு வாங்குதல், மருத்துவ சிகிச்சை, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குதல் அல்லது ஏதேனும் அவசரச் செலவுக்காக தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதம் வரை பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து ஓய்வூதியத்தை திரும்பப் பெறவும், பிப்ரவரி 1 க்குப் பிறகு என்.பி.எஸ் .கணக்கிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறுவதற்கு, ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள், மேலே சொன்ன ஏதாவது ஒரு காரணங்களை குறிப்பிட்டு அந்தந்த அரசு நோடல் அலுவலகம் அல்லது அதிகாரிகள் மூலம் என்.பி.எஸ். இல் பதிவு செய்யலாம். அதேநேரம் பணதை திரும்பப் பெறுவதற்கான காரணமாக பென்சன்தாரர் நோய்வாய்பட்டவராக இருக்கிறார் என்றால், அவர்கள் சார்பாக அவரது குடும்ப உறுப்பினர் கடிதத்தை அளித்து அணுக வேண்டும்.

தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணம் எடுக்க பென்னி டிராப்' சரிபார்ப்பு முறை கட்டாயம். அதாவது பென்னி டிராப் முறை என்பது உங்கள் வங்கிக் கணக்கு ஆக்டிவ்வாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க முதலில் ஒரு சிறிய தொகை அனுப்பி பரிசோதனை செய்யும் முறை தான். நீங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் மொத்த ஓய்வூதிய தொகையான 60 சதவிகிதத்தை மொத்தமாகப் பெறுவதற்குப் பதில், தங்களின் விருப்பத்தின் பேரில் மாதாந்தர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்தர அடிப்படையில் திரும்ப பெறவும் முடியும்.

Tags:    

Similar News