A devotee offered a ₹100 crore cheque- வங்கி கணக்கில் இருப்பதோ ரூ. 22; கோவிலுக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை ‘செக்’ தந்த வினோத பக்தர்
A devotee offered a ₹100 crore cheque- வங்கி கணக்கில், 22 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில், ஆந்திராவில், பக்தர் ஒருவர் கோவிலுக்கு ரூ. 100 கோடி ரூபாய் நன்கொடையாக காசோலை அளித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.;
A devotee offered a ₹100 crore cheque, only ₹22 in their account, temple in Andhra Pradesh. a man stole ₹15,000 from a temple in Maharashtra, andhra pradesh,andhra pradesh news, Sri Varaha Lakshmi Narasimha Swamy temple, Simhachalam temple, maharashtra temple- வங்கிக் கணக்கில் ரூ. 22 மட்டுமே உள்ள நிலையில், ரூ.100 கோடிக்கான காசோலையை பக்தர் வழங்கி இருக்கிறார்.
ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் ஒரு பக்தர், தனது வங்கி கணக்கில் ரூ. 22 மட்டுமே உள்ள ரூ. 100 கோடி காசோலையை வழங்கி இருக்கிறார். அதே வேளையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஒரு நபர் ரூ.15,000-ஐ திருடிச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கோவிலில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. தனது வங்கி கணக்கில், ரூ. 22 மட்டுமே இருப்பு வைத்திருந்த ஒரு பக்தர், ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் (சிம்ஹாசலம் கோயில் என்று பிரசித்தி பெற்ற) ரூ. 100 கோடிக்கான தேதியற்ற காசோலையை மட்டுமே வழங்கி இருக்கிறார்.
ஆகஸ்ட் 23ம் தேதி, உண்டியல் காணிக்கை வசூலை எண்ணும் போது, கோவில் அதிகாரிகள் 100 கோடி ரூபாய் காசோலையை கண்டுபிடித்தனர். இந்த பெரிய தொகையைப் பற்றி அறிந்ததும், அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக எம்விபி காலனியில் உள்ள கோடக் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டனர். 8313295434 என்ற எண்ணில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணா வைத்திருந்த காசோலை வழங்கப்பட்ட கணக்கில், அதன் பெயரில் ரூ. 22 மட்டுமே இருந்தது தெரியவந்தது.
இந்த வினோதமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்ட சிம்மாசலம் கோவிலின் உதவி நிர்வாக அதிகாரி (ஏஇஓ) ரமண மூர்த்தி கூறுகையில், "காசோலையில் தேதி இல்லாததையும், அதில் சில திருத்தங்கள் இருந்ததையும் கவனித்தோம். விசாரித்ததில், எம்.வி.பி. காலனியில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கி கிளையில் பக்தருக்கு கணக்கு இருப்பது தெரிய வந்தது. அவர் கணக்கில் ரூ.22 மட்டுமே இருந்தது. . பக்தனின் உளவியல் நிலை மற்றும் அவரது கருத்து பற்றி எங்களுக்குத் தெரியாது. பக்தனை எங்களுக்குத் தெரியாது", என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், கோயிலில் இருந்த காணிக்கை பெட்டியில் இருந்து ரூ. 15 ஆயிரத்தை ஒருவர் திருடிச் சென்றார். தானே கோப்ரியில் உள்ள ஹனுமான் கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்தார். பின்னர் நன்கொடைப் பெட்டியை சுத்தம் செய்தார், அதில் கிட்டத்தட்ட ரூ. 15,000 பணம் இருந்தது, பின்னர் போலீசார் ஸ்கேன் செய்த சிசிடிவி காட்சிகளை மேற்கோள் காட்டி ஒரு அதிகாரி கூறினார். ஒரு பெண் பக்தர் உண்டியல் உடைக்கப்பட்டதைக் கண்டு, அலாரம் எழுப்பியதை அடுத்து குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து கோப்ரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.