55 மீனவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் மனு
55 மீனவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மத்தியமந்திரி ஜெய்சங்கரிடம் மனு கொடுத்தனர்.;
இந்திய இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வம் மீனவர்கள்55 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சியறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்பபடை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
இந்நிலையிலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன் பிடி படகுகளையும் விரைவாக விடுதலை செய்ய கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை,தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்கள்.