50 ஆண்டு கால சேவை: நீதியரசர் கற்பக விநாயகத்திற்கு தேசிய சட்ட தின விருது
50 ஆண்டு கால நீதித்துறை சேவையை பாராட்டி நீதியரசர் கற்பக விநாயகத்திற்கு தேசிய சட்ட தின விருது இன்று வழங்கப்பட்டது.;
50 ஆண்டு கால நீதித்துறை சேவையை பாராட்டி நீதியரசர் கற்பக விநாயகத்திற்கு டெல்லியில் இன்று நடந்த விழாவில் தேசிய சட்ட தின விருது இன்று வழங்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த நீதியரசர் எம்.கற்பக விநாயகம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின்னர் டெல்லி மாநிலத்தின் மின்வாரிய கழக டிரிபியூனலின் தலைவராக பணியாற்றினார். தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இது தவிர அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவராகவும் உள்ளார்
சட்டத்துறையில் அவரது ஐம்பதாண்டு கால பணியை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் இன்று நடைபெற்றது. நீதியரசர் கற்பக விநாயகம் நீதித்துறையில் 50 ஆண்டுகாலமாக சிறப்பாக பணியாற்றி வருவதை போற்றும் விதமாக டெல்லியில் உச்சநீதிமன்றம் எதிரில் உள்ள கூட்டரங்கில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களும், ஆல் இந்தியா பார் கவுன்சில் அசோசியேஷன் சேர்மேன் டாக்டர் ஆதிஷ் சி அகர்வாலா அவர்களும் இணைந்து இந்த 2023 ஆண்டிற்கான தேசிய சட்ட தின விருதினை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மூத்த நீதிபதிகள்,மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர். ம நீதியரசர் எம். கற்பகவிநாயகம் இன்றைய இளைய தலைமுறை வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு ரோல் மாடலாகவும் சட்டத்துறையில் எப்படி நேர்மையாக நியாயமாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளார் என்று அனைவரும் பாராட்டினர்.
இச் சிறப்பான விருதினை பெற்ற நீதியரசர் எம். கற்பகவிநாயகம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் தனது சட்டபணிகளை சிறப்பாக செய்ய அவருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் & தலைவர் ஆர். கே.குமார் சார்பிலும், பொதுச்செயலாளர் முனைவர். வி. எச். சுப்ரமணியம் சார்பிலும் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் சார்பிலும் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், திருச்சி, சென்னை, மதுரை, மாவட்டத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.